Gymnasium for brain என்றால் உடற்பயிற்சி போல் மூளைக்கு பயிற்சி. அப்படி என்ன அவசியம் வந்து விட்டது திடீரென்று? போட்டி, போட்டி, போட்டி,எங்கும் போட்டி, எதிலும் போட்டி! வாயுவேகம், மனோவேகத்தில் சிந்திக்க வேண்டிய கட்டாயம்.
சாதிக்க வேண்டுமா? உடற்பயிற்சிக்கு இணையாக புத்தியை கூர்படுத்த பயிற்சி மிக மிக அவசியம். அதற்கான களமே www.gymnasiumforbrain.com
இன்றைய சூழலுக்கு மிகப்பொருத்தமாக "கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு" என்று அன்றே சொல்லிப் போனார்.
உலகளாவிய போட்டியினை சமாளிக்கும் முகமாக, வேலை கொடுப்பவர்களும் தங்களுக்கு ஏற்ற திறமையுள்ளவரைத் தேடி அலைகின்றனர். திறனாய்வுத்தேர்வு நடத்துகின்றனர்.
அதே நேரம் மாணவர்களும் நல்ல வேலை வாய்ப்பிற்காக தங்களது பாடத்திட்டத்திற்கும் வெளியே பட்டறிவையும், பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ள அதிகபட்ச முயற்சி மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
ஆகவே ஒருவனது வளர்ச்சி படிப்பறிவுடன் , அவனது அலசி ஆராயும் அறிவு , சமயோசித அறிவு, இடத்துக்கும், தேவைக்கும் தகுந்த மாதிரி கற்றதை உபயோகிக்கும் திறமை இவற்றை பொருத்தே அமைகிறது.
திருமதி. சீதாலக்ஷ்மி சேஷாத்திரிநாதனும், தன்னால் இயன்ற அளவு, இந்த உலகளாவிய போட்டியை எதிர் கொள்ள நம் இளைய தலைமுறைக்கு உதவ வேண்டுமென்று கனவு கண்டார். அக்கனவின் வெளிப்பாடே www.gymnasiumforbrain.com
இந்த இணையதளம் எந்தெந்த வகையில் நமக்கு உதவுகிறது ?
புதிர்கள்: அறிவுத்திறனை சோதிக்கும் தேர்விற்கான (aptitude test ) புதிர்களும் அவற்றுக்கான உதவிக்குறிப்புடன், விடையும் வழிமுறைகளும்.
வேக கணிதம் : கணிதத்தின் விரைவான வழிமுறைகள்.
கோலங்கள் : உங்களுக்குத் தெரியுமா! கோலம் என்பது மனதையும் உடலையும ஒருமைபடுத்தும் பயிற்சி என்பது. அதனை ஒவ்வொரு படியாக பயிலலாம்.
சிறுவர் பகுதி: சிறார்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் முகமாக அவர்கள் கேட்கும் கேள்விகள், சிறிய பயிற்சிகள், கதைகள்.
வலைதளத்திற்குக் கிடைத்த விருதுகளும் அங்கீகாரமும் :
அமெரிக்கநூலக விருதினையும், ஆஸ்திரேலிய கல்வித்துறையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
http://www.gymnasiumforbrain.com/ala.htm
http://www.gymnasiumforbrain.com/edna.htm
மேலும் Education world என்ற வலைத்தளம் இத்தளத்திற்கு "A+" விருதினை வழங்கியுள்ளது. http://www.gymnasiumforbrain.com/educationworld.htm
எந்த ஒரு நல் முயற்சியும் மீடியாக்களின் ஆதரவு இல்லாமல் மக்களைச் சென்றடைய முடியாது. அவ்வகையில் www.gymnasiumforbrain.com என்ற இலவச இணைய தளமானது நமது சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமைவதற்கு ஊடகங்கள் செய்துள்ள உதவி பெரு மதிப்புடையதும் பாராட்டுக்குரியதாகும். அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம்.
அன்பர்களே, நண்பர்களே, மாணவச்செல்வங்களே, உங்களது புத்தியை மேலும் கூர்மை படுத்திக் கொள்ளத் தயாரா? வாருங்கள் இணைந்து செயல்படுவோம்.