கோலங்கள்

புத்தியை கூர்மை படுத்தும் இந்த இணைய தளத்தில் கோலம் ஒரு பகுதியா என நீங்கள் ஆச்சரியப்படுவதை உணர்கிறோம்.

வீடுகளின் முன்புறமும், பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும் அழகுக்காக போடப்படும் கோலம், ரங்கோலி போன்றவை எப்படி நமது சிந்தனைக்கு தூண்டுகோலாக மட்டுமின்றி, உடற்பயிற்சியாகவும் அமைகிறது எப்படி என பார்ப்போமா?

கோலம் போடுவது என்பது மனதையும் உடலையும ஒருமைபடுத்தும் பயிற்சியாகும். சிந்தித்து பாருங்கள்.
எதை எழுதினாலும், மனமும் உடலும் இணைந்து செயல் பட்டால் தான் சாத்தியமாகும்.

அதனை மேலும் ஆர்வத்துடன் செய்யவும், கற்பனைத் திறனை வளர்க்கவும், குனிந்து நிமிர்ந்து போடும் பொழுது நல்ல உடற்பயிற்சியாகவும், வாசலில் வெட்ட வெளியில் நின்று இச்செயலை செய்யும் பொழுது நல்ல பிராண வாயு கிடைக்கவும், குறிப்பாக பெண்கள் வீட்டை விட்டு வெளியிலேயே வராத காலத்தில், நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அருமையான பொக்கிஷங்களில் ஒன்று.

புள்ளிகளை இணைத்து ஒரு படத்தினை உருவாக்கி மகிழாத குழந்தைகள் உண்டா என்ன?
இதற்கு அடிப்படை காரணம் கோலமாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம்.

கோலத்தினை நீங்கள் தரையிலோ, மொட்டை மாடிகளிலோ, காகிதத்திலோ, எதில் வேண்டுமானாலும் போட்டுப் பழகலாம். நிச்சயமாக உங்களது, சிந்திக்கும் திறனும், கற்பனா சக்தியும் மேலும் மேலும் வளர்வதை அனுபவித்து உணர்வீர்கள்.

ஆகவே தான் கோலம் மூளைக்கு வேலை தரும் இந்த இணையதளத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டிருக்கிறது.

வாருங்கள், இணைந்து செயல்படுவோம்.

உடனே முயற்சியுங்கள்
முதல் 123> கடைசி

புள்ளிகளை இணைத்தல்புள்ளிகளை சுற்றி கோடுகள்


1. கோலங்கள் - 1
2. கோலங்கள் - 2
3. கோலங்கள் - 3
4. கோலங்கள் - 4
5. கோலங்கள் - 5
6. கோலங்கள் - 6
7. கோலங்கள் - 7
8. கோலங்கள் - 8
9. கோலங்கள் - 9
10. கோலங்கள் - 10
11. கோலங்கள் - 11
12. கோலங்கள் - 12
13. கோலங்கள் - 13
14. கோலங்கள் - 14
15. கோலங்கள் - 15
16. கோலங்கள் - 16
17. கோலங்கள் - 17
18. கோலங்கள் - 18
19. கோலங்கள் - 19
20. கோலங்கள் - 20